பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள் பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைல் அடுத்து, ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சியை விட்டு விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் சிங்கள் பெண்மணி ஒருவர் மகிந்தவின் புதல்வர்களான, நாமல் ராஜபக்ச, ஜோசித ராஜபக்ச மற்றும் ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து , மூன்று சிங்களவர்களையும் அவமானப்படுத்திய குடும்பத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள். நன்றியுடன் இருங்கள் என முகநூலில் பதிவிட்டுள்ளார்.