கனடாவில் குடும்ப தலைவர் ஒருவருக்கு லொட்டரியில் இரண்டாம் முறையாக மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.ஒன்றாறியோவின் தோர்ன்ஹில்லை சேர்ந்தவர் வின்செண்ட் சார்ல்மேக்ன். இவருக்கு திருமணமாகி மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். வின்செண்டுக்கு கடந்த 2013ல் லொட்டரியில் பெரிய பரிசு விழுந்திருந்தது.
இதன்பின்னரும் தொடர்ந்து அவர் லொட்டரி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வின்செண்டுக்கு மீண்டும் லொட்டரியில் $ 1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.இது குறித்து வின்செண்ட் கூறுகையில், இரண்டாம் முறையாக பரிசு விழுந்தது குறித்து என் மனைவியிடம் சொன்ன போது மீண்டுமா? என ஆச்சரியத்துடன் கேட்டார்.
பரிசு பணத்தை முதலீடு செய்யவுள்ளேன். அதே போல தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.