ஒரு மாத இடைவெளியில் 2 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்திய மாநிலம் ஆந்திராவில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அண்டை கிராமங்களான Mellampudi மற்றும் Vaddeswaram ஆகிய இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த கிராமங்களில் சில நாட்கள் இடைவெளியில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மெல்லம்புடியில் மார்ச் 14-ஆம் திகதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் மாலை 3 மணியளவில் காணாமல் போனார். அடுத்த இரண்டாவது நாளில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் இயர்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர், சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையினரை அணுகி, குழந்தையின் கொலையில் 19 வயது கோபிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறினர்.
பொலிஸார் உடனடியாக கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் கடந்த வாரம் சிறுவனைக் கடத்தி, வாழைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அடித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
இதனையடுத்து Tadepalli பொலிஸார், இதேபோல் பிப்ரவரி 11 மதியம் 3 மணியளவில் பக்கத்து கிராமமான வதேஸ்வரத்தில் 8 வயது சிறுவனைக் காணாமல் போனது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கோபியை மேலும் விசாரணை செய்துள்ளனர்.
அச்சிறுவன் உள்ளூர் பக்கிங்ஹாம் கால்வாயில் தவறி விழுந்ததாக குடும்பத்தினரும் பொலிஸாரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அந்த கொலையையும் தானே அதே முறையில் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கோபி, 14 வயதாக இருந்தபோது, ஒரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, அவரது உடலை பக்கிங்ஹாம் கால்வாயில் வீசியதாக வதந்தி இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
புகார் அளிக்கப்பட்டால் சிறுவனின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று கிராமவாசிகள் பாதிக்கப்பட்டவரின் தந்தையை சமாதானப்படுத்தியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், கோபியின் தந்தையும் ஒரு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. அவரது முதல் மனைவியைக் கொலை செய்ததற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவர்களை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, பின்னர் கொடூரமாக கொலை செய்வதை கோபி வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் “சைக்கோ” மனோபாவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
“அவர் ஒரு விபரீதமானவர், சமுதாயத்திற்கு ஆபத்தானவர். நாங்கள் தடயவியல் சான்றுகள் மற்றும் சாட்சிக் கணக்குகளை சேகரித்தோம். அவர் ஜாமீனில் வெளிவராமல் இருப்பதற்கும், மேலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் 90 நாட்களுக்குள் ஒரு நல்ல குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம்” என்று குண்டூர் மாவட்ட காவல்துறை தலைவர் அம்மி ரெட்டி கூறியுள்ளார்.