கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் இன்றுடன் 7வது நாளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அங்கு போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், யுவதிகள் உட்பட போராட்டகார்களுக்கு கலைஞர்கள் உட்பட பல தரப்பினர் ஆதரவளித்து வருகின்றனர்.
அத்துடன் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளையும் வழங்கி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கு எதிராக பல்வேறு வகையில் நூதனமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பை வாளிகளின் புகைப்படங்களை ஒட்டியும், குப்பை பொதிகளுக்கு குரக்கன் சாலவையை அணிவித்தும் இளைஞர், யுவதிகள் நூதனமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோட்டா கோ ஹோம் என்ற ஆங்கில வாசகத்துடன் பட்டம் ஒன்றை இலங்கை தேசிய கொடியுடன் வானில் பறக்கவிட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளளது.