கனடாவில் பள்ளிக்கூட வகுப்பறையில் 17 வயது மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.அல்பர்டாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ் தி கிங் பள்ளியில் உள்ள வகுப்பறையில் 17 வயதான ஜெனிபர் விங்க்லர் என்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டார்.படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.இந்த கொலை சம்மந்தமாக டயலன் தாமஸ் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமஸும், ஜெனிபரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.ஆனால் இந்த கொலைக்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்து இன்னும் தெரியாத நிலையில் விரைவில் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.