நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான பிரேரணை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமலை பிரதமராக்க முயற்சிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மஹிந்த பதவி விலகினால், அந்த பதவிக்கு தகுதியானவர் நாமல் ராஜபக்ஷ மாத்திரமே என சிலர் நம்புகின்றனர்.
இந்த விடயத்தை அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் குழுவொன்று நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே முன்னின்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு சமூக ஊடகங்களில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுக்க பிரதமரின் ஊடகப் பிரிவு, நெருங்கிய ஊடகவியலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது