விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் சில வாரங்களில் நாடு திவாலாகிவிட்டதாக அறிவிக்க நேரிடும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உடனடியாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு திவால் நிலையின் விளிம்பில் இருப்பதாகவும், டொலர்களைப் பயன்படுத்துவது மிகுந்த எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக நான் அறிவித்து வந்தேன். ஆனால் அதனை யாரும் கண்டுக்கொள்ளாமல் செலவு செய்து அழிவு நோக்கி வந்துவிட்டோம்.
இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாடு திவாலாகிவிட்டதாகபிரகடனப்படுத்த வேண்டியிருக்கும். நாளைக்கு யார் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த நிலைமைதான் காணப்படும்.
கட்டாயம் ஆட்சியாளர்கள் திருட வேண்டும் என்ற அரசியலமைப்பைக் கொண்ட ஒரே நாடு இலங்கை உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.