அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
ராஜபக்சவின் சொத்துக்களை முடக்கி அந்த பணத்தை உணவு மற்றும் எரிவாயு நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அமெரிக்க அரசுக்கு சில மாணவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை சொத்துக்களை கைப்பற்றாமல் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.