தமிழகத்தில் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன் (36). விவசாயி. இவரது 2-வது மனைவி ராமேஸ்வரி(30).நேற்று முன்தினம் காலை மனோகரன் ராமேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மனோகரன் கொடுத்த வாக்குமூலத்தில், நான் எனது 2-வது மனைவி ராமேஸ்வரியை கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்தேன்.பின்னர் எனது சொந்த பணத்தில் ராமேஸ்வரியின் தாய், தந்தைக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டினேன். இந்நிலையில் எனது மனைவி ராமேஸ்வரி அவ்வப்போது செல்போனில் வேறு ஒரு நபருடன் அதிக நேரம் பேசி கொண்டிருந்தாள்.
அவளின் இந்த செயல் எனக்கு சந்தேகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எனக்கும், அவளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது அவள் என்னை அசிங்கமாக திட்டியும், வீட்டை விட்டு வெளியே போ என்றும் பேசி வந்தாள்.இந்தநிலையில் நான் கட்டிய வீட்டை எனது பெயரில் எழுதி கொடுங்கள் என்று கேட்டேன்.
இதற்கு எனது மனைவி ராமேஸ்வரியும், அவரது பெற்றோரும் மறுத்து விட்டனர். இதனால் நான் ஆத்திரம் அடைந்து எனது 2-வது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.