ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று எச்சரித்தார்.
இன்று நான்காவது நாளாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒன்று வழி நடத்துங்கள் அல்லது வழியை விட்டு வெளியேறுங்கள் என கேட்டுக்கொண்டார்.
மேலும் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கும், 6.8 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கும் வாக்களித்திருந்தமையினை அரச தரப்பு உறுப்பினர்கள் மறந்து செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே மக்களின் தற்போதைய கோரிக்கைக்கு செவிசாய்த்து ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக பிரேரணையை கொண்டுவரப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.