நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு- கிரிபத்கொடவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது முன்னாள் இராணுவத்தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.