இந்த காலத்தில் பெண் கிடைப்பதே பெரிய டா ஸ்க்காக உள்ளது இந்த லட்சணத்தில் சொந்தக்காரனில் எவனாச்சு ஒருவன் சபையில் கண்டதை பேசி கல்யாணத்தையே கெடுத்துவிடுகிறான். ஆண்டவன் க ருணையில் ஏதாவது அப்படி இப்படியென கிடைத்தாலும் கல்யாண வாழ்க்கை சுமூகமாக போவதில்லை. அப்படித்தான் சொந்தகார பொண்ணுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கல்யாணம் நடந்தது.
மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக்கொண்டு தான் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். இப்போது என்ன நடந்தது என தெரியவில்லை. பொண்ணு, அம்மா வீட்டிற்கு வந்துவிட்டது. என்ன ஏதென விசாரித்தால், மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் குழந்தை குழந்தை என நச் சரித்துள்ளனர். அதற்காக கோபித்து கொண்டு வரலாமா? என நாங்களும் பெண்ணை திட்டிக்கொண்டிருந்தோம். பின்னர் தான் தெரிந்தது. விஷயம் வேறு!
கல்யாணம் ஆன நாள் முதல் மாப்பிள்ளை பெண்ணை தொடவே இல்லையாம். பொண்ணும் இதனை நாசுக்காக சொல்லியுள்ளது. இந்த சொந்தக்கார பயபுள்ளைகளுக்கு புரியவே இல்லை. பின்னர் வெளிப்படையாவே சொல்லிவிட்டார்.
ஒருவேளை மாப்பிள்ளையை கட் டாயபடுத்தி கல்யாணம் செய்துவிட்டார்களோ? என்றால் அதுவும் இல்லை. நிச்சயத்திற்கு பின்னர் பொண்ணும் மாப்பிள்ளையும் நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த பையனுக்கு வேறு ஏதாவது பெண்ணுடன் தொடர்பு உள்ளதா? என்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதல் இருந்துள்ளது. அது இப்போது இல்லை என்றுதான் மாப்பிள்ளை பெண்ணிடம் கூறியுள்ளார். பின்னர் வேறு என்ன காரணமாக இருக்கும்? ஒரு வேளை அந்த சேப்டரில் மாப்பிள்ளை வீக் கோ என நினைத்து கொண்டிருந்தோம். அப்படியென்றால்கூட ஒரு கவுன்சிலிங் போதுமே!என்னதான் பிரச் சனை என விசாரிக்க போனோம்? பின்னர்தான் தெரிகிறது, இரண்டு வருஷத்திற்கு முன்னர் பட்டுப்போன காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. எப்போது இது மீண்டும் மலர்ந்துள்ளது என்றால், இவர்கள் கல்யாணத்திற்கு பின்னர். அந்த பெண்ணிற்காவது அறிவு வேண்டும். அந்த பையனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, மீண்டும் அவர்களது வாழ்க்கையில் தலையிட கூடாது என்று. இப்போது வி வாகரத்தில் வந்து நிற்கிறார்கள். யாரோ இருவரின் புரிந்துகொள்ளாத காதல்மு றிவிற்கும் மீண்டும் மலர்வதற்கும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை தான் ப லிகடாவா? வி வாகரத்தான பெண்ணிற்கு அவ்வளவு விரைவில் திருமணம் நடக்குமா?