நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கருதுகிறது.
எனினும், அவர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
பிந்திய செய்தி
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.