மகாமுனி என்ற நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டெடி. தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
ஜெயம் ரவியை வைத்து மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இமான் இசையமைத்த இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
முதலில் தியேட்டர்களில் வெளியாக இருந்த டெடி திரைப்படம் பின்னர் நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. இதுவே படக்குழுவினருக்கு ஜாக்பாட் அடித்தது போலதான். பல மொழிகளில் டப் செய்து வெளியிட உதவியது. அதன் காரணமாக குழந்தைகளை கவர்ந்துள்ள டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டி கொடுத்துள்ளதாம்.
மேலும் டெடி படத்தில் வரும் கரடி பொம்மையின் வியாபாரமும் தற்போது சூடுபிடித்துள்ளதாம். டெடி படம் பார்த்த குழந்தைகள் அனைவருமே டெடி பியர் வாங்கி கொடுக்க சொல்லி வீட்டில் பெற்றோர்களிடம் அடம்பிடிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
அனைவரையும் கவர்ந்த டெடி கதாபாத்திரத்தில் கோகுல் என்ற உயரம் குறைவான திறமைசாலி நடித்துள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படத்தை படத்தின் இயக்குனரான சக்தி சௌந்தரராஜன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அவரது உடல் மொழி டெடி பியர்க்கே ஏற்றவாறு இருந்ததால் அவரை தேர்வு செய்தாராம். மேலும் அவரது முகத்தை முழுவதும் 3டி அனிமேஷன் மூலம் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெடி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.