உக்ரைன் இன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகின்றபோதும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பல நாடுகளை போரை நிறுத்துமாறு ரஷ்யாவை கேட்டுகொண்டபோதும் ரஷ்ய அதிபர் புதின் (Vladimir Putin) அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை (Alina Kabaeva) சிறை பிடிக்க ரஷ்யாவை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
புட்டினின் (Vladimir Putin) குழந்தைகளுடன் அலினா கபேவா (Alina Kabaeva) சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரை கண்டறிவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலினா கபேவா (Alina Kabaeva) சுவிட்சர்லாந்தில் உள்ள அல்தாய் மலைகளில் அமைந்துள்ள ஒரு சொகுசு மாளிகையில் இருப்பதாக அம் மனுவில் கூறப்படுள்ளது.
அலினா கபேவா (Alina Kabaeva) 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான ஆல்ரவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதுடன், சிட்னி 2000 ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார்.
அதுமட்டுமல்லாமல் அலினா கபேவா (Alina Kabaeva)உடலை வில்லாக வளைக்கும் திறன் பெற்றவர். 38 வயதான கபீவா (Alina Kabaeva)முன்னாள் கால்பந்து வீரர் மராட் கபாயேவின் மகள் ஆவார். அலினா கபேவா 1983 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் உள்ள உஸ்பெக் SSR-ல் உள்ள தாஷ்கண்டில் பிறந்தார்.
அதேவேளை கபேவாவும் (Alina Kabaeva)புடினும் (Vladimir Putin) பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ரஷ்யாவை சேர்ந்த பல முக்கிய நிறுவனங்கள் கபேவா (Alina Kabaeva) குடும்பத்திற்கு பணம் மற்றும் சொத்துக்கள் உட்பட பல பரிசுகளை வழங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியானது.
புடினால் (Vladimir Putin) சிறையில் அடைக்கப்பட்ட , எதிர் கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)ஏற்படுத்திய ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
புடினின் (Vladimir Putin) ரகசிய காதலி என கூறப்படும் கபேவா (Alina Kabaeva), புடினின் ரகசிய குழந்தைகளின் தாய் என்றும், அவருக்கும் புதினுக்கும் (Vladimir Putin)பல குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்து ரஷ்ய அதிபர் (Vladimir Putin)அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றும் தொடர்ந்து உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசு சார்பு தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் நிறுவனம் எனக் கூறப்படும் நேஷனல் மீடியா குழுமத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருக்கும் கபேவா (Alina Kabaeva), சுமார் $10 மில்லியன் சம்பளம் பெறுகிறார் என முன்னர் தகவல்கள் வெலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.