சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இன்று அவர் சபையில் வெளியிட்டார்.
நிதி அமைச்சர் பதவியை பெறுவதற்காக ஹர்டி டி சில்வா ஆட்டோவில் பயணிப்பதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே , அவர் வீதிகளில் நடமாடுகின்றார். எதிரணி ஆட்சியைப் பிடிப்பதென்பது பகல் கனவெனவும் கூறினார்.
அத்துடன் சஜித் அணியில் உள்ள 10 பேர் ரணிலுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்த அவர், இன்னும் இரு வாரங்களில் அவர்கள் ரணில் பக்கம் சென்றுவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர், நாட்டில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறினார்.