ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் பெருமெடுப்பில் நடத்துவதற்கு அக்கட்சியின் ஸ்தாபகரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaska) தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், காலிமுகத்திடம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மே தின கூட்டத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது