சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஸ்ய வீரர்கள், உக்ரைனுக்கு எதிராக ரஸ்யா நடத்தும் படையெடுப்பை கண்டித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை வெளியி;டும் வகையில் ரஸ்ய விண்வெளி வீரர்கள் மூவர், தமது ஆடைகளில் உக்ரைனிய நிறங்களை அணிந்திருந்தனர்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம்,ரஸ்யா, உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்தவர்களாவர்.
இந்த மூவரும் விண்வெளி நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த அமெரிக்க, ரஸ்ய மற்றும் ஜெர்மன் குழுவினர் வரவேற்றனர்.
இதன் பின்னர், குறித்த மூன்று ரஸ்ய வீரர்களும் உக்ரைன் நிறங்களுடன் கூடிய தமது ஆடைகளை அணிந்த வண்ணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிதந்தனர்.
இது அவர்கள் ரஸ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை எதிர்க்கும் செயற்பாடாகவே அமைந்திருந்தது.
இந்த தருணத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ரஸ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகிய இரண்டும் நேரடியாக ஒளிபரப்பின.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது ரஸ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும்.
அமெரிக்கா- ரஸ்யா என்ற இது இரண்டு உலக வல்லரசுகளுக்கு இடையே பதற்றங்கள் இருக்கின்றபோதும், கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த விண்வெளி நிலையம், அமெரிக்க-ரஸ்ய கூட்டாண்மையால் வழிநடத்தப்படுகிறது.