இலங்கையில் இருந்து காணாமல் போன ஒருவரை அவரது படகுடன் தேடும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கரையோரத்தில் கைவிடப்பட்ட கப்பல் ஒன்று கடலோர காவற்படையினரினால் கண்டெடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இருந்து காணாமல் போன குறித்த நபர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு காணாமற்போனவர் மற்றும் அவரது குடும்ப விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் தமது உளவுப்பிரிவின் உதவியோடு தேடுதலை நடத்திவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.