சமயல் எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைய ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. “பணம் செலுத்தப்பட்டதால், உள்நாட்டு சமயல் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவை கையிருப்பு கிடைக்காத காரணத்தால் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன.
உற்பத்தியை தொடங்குவதற்கு எரிவாயு சரக்குகளை பெறாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை இன்று முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
அத்துடன் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்களும் நெருக்கடியான நிலையில் கவலையில்உள்ள நிலையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஆனால் சமயல் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் இன்று வியாழக்கிழமை தொடங்கும் அறிவிக்கப் பட்டிருந்தாலும் அவை கிடைக்கப் பெற்றாலே உண்மை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

