தேர்தல் பிரசாரத்தின்போது செருப்பால் அடித்து பொது மக்களால் விரட்டப்பட்ட வேட்பாளர் ஒருவர் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற தொகுதியில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் போட்டியிட்டார்.
இவருக்கு ஆதரவாக பாஜகவின் பல முன்னணி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அவ்வாறு பாஜக தலைவர் ஒருவர் பிரச்சாரம் செய்த போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் வேட்பாளரையும் பாஜக தொண்டர்களையும் செருப்பை காட்டி விரட்டி அடித்தனர்.
இதன் காரணமாக அந்த தொகுதியில் பங்கஜ் சிங் தோல்வி அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 1.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை இந்திய சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒருவர் இவ்வளவு அதிகமான வாக்குகளில் வெற்றி பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை து குறிப்பிடத்தக்கது.