ஒரு கணவன் எந்நேரமும் மனைவி அழகற்றவறாக இருப்பதாக கூறி திட்டிகொண்டேயிருந்ததால் அந்த மனைவி தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பொலிஸாரிடம் புகார் கூறினார் .
மும்பையின் கிராண்ட் ரோட்டில் வசிக்கும் ஒருவர் அஹமதாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு அந்த கணவர் அந்த மனைவியின் தோற்றத்தை பார்த்து அடிக்கடி கிண்டலும், கேலியும் செய்துள்ளார். மேலும் அவர் கருப்பாக இருப்பதாவும் குண்டாக இருப்பதாகவும், குள்ளமாக அசிங்கமாக இருப்பதாகவும் ,ஆனால் அவரின் முன்னால் காதலி அழகாக இருப்பதாகவும் அவர் குறை கூறி திட்டிகொண்டேயிருந்தார் .
மேலும் அவரின் தோற்றத்திற்கு ஈடாக அதிக வரதட்சணை கொண்டு வருமாறு கொடுமை படுத்தியுள்ளார். மேலும் அவரின் மாமியாரும் அந்த மருமகளை கொடுமை படுத்தியுள்ளார்.அது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்திலிருக்கும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரை எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலி செய்து கொண்டுமிருந்துள்ளார்கள்.
இதனால் மிகுந்த மனம் உடைந்த அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த கணவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவர் மீதும் புகாரளித்தார் .பொலிஸார் அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரையும் விசாரித்து வருகிறார்கள்