விமல் வீரவங்சவின் சகாவான இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர என்பவரே , இவ்வாறு தன்னுடைய இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜயந்த சமரவீர , முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது