195 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியும் கிட்டதட்ட அனைத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
இவ்வாறான நிலையில், அமமுக-வின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 195 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், தேமுதிக தனித்து தான் 2021 சட்டமன்ற தேர்தல் சந்திக்கும் என கூறப்படுகிறது.
அதேசமயம், அமமுக கூட்டணியில் இன்னும் 19 தொகுதிகள் மீதம் உள்ள நிலையில், தேமுதிக உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் இன்று நல்ல முடிவு கிடைக்கும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.