2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இலங்கை முழுவதுமாக திவாலாகி விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலை, அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை தான் கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்ய, நஷ்டத்தில் இயங்கும் பல அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.