நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற சங்கைக்குரிய அங்கம்புரே சுகுணபாலாபிதான தேரரின் 27வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரினதும் அபிப்பிராயத்திற்கமைய, சட்டத்தை மாற்ற முடியாது. நாட்டின் சட்டத்திற்கு முரணாக அல்லது ஏனைய சட்டத்திற்கு அமைய செயற்பட மக்களைத் தூண்டுவோரை அல்லது குரோத அரசியலை பரப்பி இனவாதத்தைத் தூண்ட முயற்சிப்போர்களைக் கைது செய்வதற்கு ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.