திரையுலகின் நட்சத்திர ஜோடியான வலம்வந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு (2021) ஒக்டோபரில் விவாகரத்தை அறிவித்து ரசிகர்களுக்கு மத்திரமின்றி திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர்.
4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை அவர்கள் திடீரென உதறியது சினிமா துறையினருக்கே கடும் அதிர்ச்சியாக ஏற்படுத்தியிருந்தது.
மேலும், பேட்டியில் ஒன்றின் போது நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தெரியவந்தது.
அந்த பேட்டியை பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு தான் எடுத்திருந்தார். அதே பேட்டியில் நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா வெளிப்படையாக போட்டுடைத்தார்.
“அவருக்கு pillow (தலையணை) தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த pillow நடுவில் இருக்கும்” என சமந்தா கூறி இருக்கிறார்.
மேலும், காதலித்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு இணைபிரியாத ஜோடியாக கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அவர்களா இப்படி விவாகரத்து முடிவு எடுத்தது என தற்போதும் அந்த பேட்டியை பார்த்தால் நமக்கு தோன்றும்.
இதேவேளை, இவர்கள் விவாகரத்து செய்ய என்ன காரணம் என அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், நாக சைதன்யா ‘அவருக்கு விவாகரத்து மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி’ என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.