தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் கர்ணன். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள கர்ணன் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. அசுரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை போலவே கர்ணன் படமும் மிகப்பெரிய வெற்றியை குறிக்கும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலும் தனுஷ் ரசிகர்கள் தனுஷ் மாஸ் படத்தில் நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை கர்ணன் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட சில காட்சிகளை பார்த்த அனைவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த படத்தை புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.
அந்தவகையில் தனுசுக்கு திருடா திருடி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சுப்பிரமணியம் சிவா என்று இயக்குனர் சமீபத்தில் கர்ணன் டீசரை பார்த்தாராம். அதன்பிறகு அவரது ட்விட்டர் பக்கத்தில், கர்ணன் டீஸரை பார்த்தேன், வேற லெவல் என குறிப்பிட்டுள்ளார்.