பிரபலமான நடிகை ஒருவர் சமீபத்தில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் திடீரென மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு இணையாக பிரான்ஸ் நடிகர் நடிகைகளுக்கு சீசர் என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் கொரானா பிரச்சனை காரணமாக நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் 57 வயது மதிக்கத்தக்க கோரின் மாசீரோ(corinne masiero) என்ற நடிகை சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் விருதை கொடுப்பதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடைக்குச் செல்லும் போது வேறு ஒரு உடை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு மேடைக்குச் சென்று மைக்கை கையில் வாங்கியதும் தன்னுடைய ஆடையை களைய தொடங்கினார். முதலில் ரத்தக்கறை படிந்த நிறத்தில் ஒரு ஆடையை காட்டிவிட்டு பின்னர் அதையும் அவிழ்த்து நிர்வாணமாக மேடையில் என்றார்.
மேடையில் நிர்வாணமாக நின்றதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய உடலில் அந்நாட்டு பிரதமருக்கு ஒரு வாசகம் ஒன்றை எழுதி அதை மேடையில் பரப்பி உள்ளார். மேலும் அதில், கலை இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவும் இல்லை எனவும், அதை திருப்பிக் கொடுங்கள் எனவும் பிரதமருக்கு உடலில் கோரிக்கை எழுதி வைத்திருந்தார்.
மேடையில் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டது அங்கு சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்திலிருந்து உடனடியாக நடிகை கோரின் மாசீரோ என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.