முகநூலில் அறிமுகமான பெண் தோழியிடம் ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதற்காக ராஜஸ்தானில் ராணுவ வீரர் ஒருவரை சிஐடி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளர்.
அந்த விவரம் பாகிஸ்தான் ஏஜன்ட்டுக்கு கை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெண்கள் பெயரில் ராணுவ வீரர்களுக்கு வலை வீசி அவர்களிடமிருந்து ரகசியங்களைப் பெற சதி நடைபெறுகிறது.
இதில் 22 வயதான ஆகாஷ் மெஹரியா என்ற ராணுவ வீரரும் இந்த காதல் வலையில் விழுந்தார்.
அவருக்கு வலை விரித்த பெண் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரகசியங்களை விலைபேசி விற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.