மும்பையில் நடனாடிக்கொண்டே, பர்கரை போன்ற உணவான டபேலியை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நபரின் வீடியோ வைரலாகிவருகிறது.
மும்பையின் அந்தேரி பகுதியில் சாலையோரம் டபேலி கடையை வைத்திருக்கும் காபூல் நடனமாடிக்கொண்டே டபேலியை விற்பனை செய்கிறார்.
காபூலின் நடன வித்தைகளை பார்த்துக்கொண்டே டபேலியை உண்பதற்காகவே அவருடைய கடைக்கு கூட்டம் கூடுகிறது.கைகள் எப்போதும் துறுதுறுவென வித்தியாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் காபூலை அப்பகுதி மக்கள் Dancing Dabeli Man என அழைக்கின்றனர்.