தேர்தல் முறை தொடர்பில் சகல கட்சிகளுடனும் தேர்தல் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது.
அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 24ம் திகதி இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்து வரும் தேர்தல் எந்த முறையில் நடாத்தப்பட வேண்டும் என்பது குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.

