அன்பான உறவுகளே!
உதவும் இதயங்கள் பவுண்டேசன் யெர்மெனி. உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா.
உதவித்தொகை:7.28750,00 ரூபாய்
09.02.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இரண்டாவது கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் திரு.குணலிங்கம் மணிமாறன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் யெர்மேனி,மற்றும் சரஸ் சேவைகள் யெர்மேனி இயக்குனர்) அவர்களால் பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது தொடந்து திரு.தனபாலசிங்கம் அகிலன் பிரதேசசெயலாளர் பூநகரி அவர்களால் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது தொடர்ந்து விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி வைத்தது மகிழ்ந்தனர் அதனைத்தொடர்ந்து பங்குத்தந்தை நிதர்சன் நாச்சிக்குடா அவர்களின் உரை இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின் படி நிகழ்வுகள் இடம் பெற்றது.மேலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்ககள் செல்வி சுதாமினி குணலிங்கம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.
மிக அழகாக இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து தந்த பங்குத்தந்தை நிதர்சன் அவர்களுக்கும் எமது மகளிர் அணி உறுப்பினருக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
முக்கியமாக இலவச கல்வி நிலையம் அமைப்பதற்கு பணஉதவி வழங்கியவர்கள்:
ரூட்லிங்கன் யெர்மேனி மக்கள்(அகில ரூபன் அண்ணா) ஊடாக 1.40000,00 ரூபாயும், தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கு 1.22000,00 திரு திருமதி சண்முகராஜா குடும்பம்(கனடா) முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக வழங்கியுள்ளார்கள் . மிகுதி 4.61750,00 ரூபாயினை எமது நிறுவனத்தின் அங்கத்தவர்களின் மாதாந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த பண உதவி வழங்கிய அனைத்து சமூகசேவையாளர்களுக்கும் மற்றும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கும் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா மக்கள் சார்பாகவும் உதவும் இதயங்கள் அமைப்பு சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலவச மாலை நேரக் கல்வி நிலையம் வருகை தந்து ஆரம்பித்து சிறப்பித்து வைத்த திரு.தனபாலசிங்கம் அகிலன் பிரதேசசெயலாளர் பூநகரி, பங்குத்தந்தை நிதர்சன் நாச்சிக்குடா,திரு நடராஜா கலைச்செல்வன் (ஊடகவியலாளர் முல்லைத்தீவு,திரு.குணலிங்கம் மணிமாறன் (உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் யெர்மேனி,செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவன அங்கத்தவர் யெர்மேனி, மற்றும் விருந்தினர்கள், பெற்றோர்கள்,எமது மகளிர் அணி உறுப்பினர்களுக்கும் உதவிகள் புரிந்த அன்புள்ளங்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மேனி.