இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்த முஸ்லிம் சிறுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கும்பல் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோவில், இந்த மத அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொருவருர் சிறுவனை பிடித்து, உன் பெயர் என்ன என்று கேட்க, அசிப் என சிறுவன் கூறுகிறான்.
உன் தந்தை பெயர் என்ன என கேட்க, அபிப் என சிறுவன் கூறுகிறான். பின்னர் கோவிலுக்குள் எதற்கு சென்றாய் என கேட்க, தண்ணீர் குடிக்கச் சென்றேன் என சிறுவன் கூறிய உடன், அந்த நபர் அவனை சரமாரியாக தாக்குகிறான்.
மேலும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
Horrific!! A mob of Hindu extremists viciously assault a Muslim boy for drinking water from a temple in Ghaziabad, Uttar Pradesh.
The perpetrators know their violence has the tacit approval of the state, so they uploaded the attack on social media! pic.twitter.com/pkAgHrEzbe
— CJ Werleman (@cjwerleman) March 12, 2021