ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (09-02-2022) பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) மற்றும் பல ஆளுங்கட்சி அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக குறித்தக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.