யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் எல்.என்.ஜீ விநியோகம் என்பவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளதால், எங்கள் மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை ஜனாதிபதி எந்த சந்தர்ப்பதிலும் எடுக்கலாம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) ஆகியோருக்கு மின்சார நெருக்கடியை சமாளிக்க எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து தான் தனிப்பட்ட ரீதியில் அறிவித்திருந்தாலும் அதனை ஊடகங்களிடம் கூற முடியாது என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கைக்கு புறம்பாக சென்று, சிக்கல்களுடன் கூடிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத்தள வாலையொளி தளம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தவறுகளை விமர்சித்து, அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியின் பணிகளை விமல் வீரவங்ச (Wimal Weerawansa) மற்றும் வாசுதேவ நாணயக்காரவுடன் (Vasudeva Nayanakara) இணைந்து நிறைவேற்றி வருகிறேன்.
விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரை போன்று எனக்கும் அரசாங்கம் மற்றும் அமைச்சு பதவிகளை விட நாடே முக்கியம். அமைச்சு பதவி பறிபோனாலும் அரசாங்கம் இல்லாமல் போனாலும் எனக்கான நாட்டை இல்லாமல் செய்ய முடியாது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் எல்.என்.ஜீ விநியோகம் என்பவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளதால், எங்கள் மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை ஜனாதிபதி எந்த சந்தர்ப்பதிலும் எடுக்கலாம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்