அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதன் தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சரவைக்கு யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனியார் பிரிவின் தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார்களுடன் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், தனியார் பிரிவின் முதலாளிமார்கள் இதுவரை சம்மதிக்கவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.