மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும்.மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும்.
ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்.மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது தவறான வழிமுறை ஆகும்.
வலிக்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.எனவே மாதவிடாய் வழியை குறைக்க ஒரு சூப்பரான இயற்கை முறை ஒன்றை தற்போது இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- ஆல்கஹால் ( ஓட்கா அல்லது பிராந்தி) – 4 தேக்கரண்டி
- லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் லாவெண்டர் எண்ணெயை தொப்புள் மற்றும் தொப்புளை சுற்றிய பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், அதே செயல்முறையை ஆல்கஹால் கொண்டு மீண்டும் செய்யவும்.
பருத்தி துணியைப் பயன்படுத்தி இந்த செயல் முறையை மேற்கொள்ளலாம். உங்களுக்கு மாதவிடாய் வலி ஏற்படும் போது இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.
பயன்
- ஆல்கஹால் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகிய இரண்டும் கருப்பையைச் சுற்றியுள்ள அழற்சியைக் குறைக்க உதவும். மேலும் இது நமது உடலில் ஏற்படும் அடிவயிற்று வலியைக் குறைக்கிறது.
- ஆல்கஹால் மற்றும் லாவெண்டர் எண்ணெயிலிருந்து கிடைக்கும் நொதிகள், கருப்பையின் வெளிப்புற சவ்வை, தோல் வழியாக சிகிச்சையளிக்க நமக்கு உதவுகிறது.
குறிப்பு
- இந்த கலவையை பயன்படுத்துவதில் முதல் மாதம் பொறுமை மிக அவசியம். ஏனெனில் இந்த முறை படிப்படியாக நமது உடலில் வேலை செய்ய தொடங்கும். இரண்டாவது மாதத்திலிருந்து இதற்கான பலனை அனுபவிப்பீர்கள்.
- இந்த சமயங்களில் எண்ணெய் / காரமான தின்பண்டங்கள் போன்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது போன்ற உணவுகளை உட்கொள்வது அடிவயிற்று வலியை அதிகமாக்கும்.
- மேலும் வழக்கமான உடற்பயிற்சி இது போன்ற வலிகளை குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது ஹார்மோன்களை சமப்படுத்த உதவும்.