இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு லொறிகள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஒருவர் உயிருடன் எரிந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் மேட்சல் மாவட்டத்தில் ஷமிர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் வியாழக்கிழமை பகல் நடுங்க வைக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் சேலம் பகுதிக்கு செல்லும் ஒரு லிறியை முந்திச்செல்ல முயன்ற ஒரு லொறி, இன்னொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் இரு லொறிகளும் தீ பற்றி எரிய, அதில் பயணம் செய்த ஒருவர் தப்பிக்க முடியாமல் நெருப்பில் சிக்கி உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சில மணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான சாலையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.