வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிக்குளம் பொது மயானத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்பொது மயானத்தில் இன்று (11032021) மாலை 400 மணியளவில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில்,
நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் சடலத்தினை அவதானித்தனர்குறித்த நபரின் மரணம் தொடர்பில் அச்சம் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் தற்கொலையா? கொலையா? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
குறித்த சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் செட்டிக்குளம் பொலிஸார் கோரியுள்ளனர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 52 வயதுடைய செல்வகுமார் என பொலிஸார் சடலத்தினை அடையாளம் கண்டுள்ளனர்