நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (24) நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கை மார்ச் 09-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.