திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலேயே அதிகளவில் கடன் பெறப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் மொத்த கடன் 21 ட்ரில்லியன் ரூபாய். இதில் 8 ட்ரில்லியன் ரூபாய் கடன் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலேயே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது சோறு வழங்கிய தந்தையாக சீனாவின் ஜனாதிபதி ஷீ ஜின்னை மக்கள் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.