முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவுமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவிற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை பெரும் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதாகவும், தற்போதைய நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிவதில்லை எனவும், காலை ஒன்றையும் மாலையில் ஒன்றையும் கூறுகின்றார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மொட்டு கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டாம் என தாம் கோரியதாகவும் அதனை கட்சியின் தலைவர் மைத்திரி கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தம்மை கட்சியிலிருந்து நீக்கி, தொகுதி அமைப்பாளர் பதவியை பறித்த மைத்திரி இன்று மொட்டு கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றார் எனவும் இதனையே தாம் இரண்டு ஆண்டுகளாக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.