நெதர்லாந்திலிருந்து பரிசு பொதி ஒன்றில் அனுப்பபட்ட சுமார் 4 ஆயிரம் போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கே அனுப்பபட்டுள்ள நிலையில் அது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 26 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 4 ஆயிரம் போதை மாத்திரைகள் கொழும்பு மத்திய தபாலகத்தில் கைமாற்றப்பட்டபோது சுங்க பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுதத் சில்வா கூறியுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தையை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.