தமிழகத்தில் கணவன் உயிரிழந்த சம்பவத்தில், அவரை நான் தான் சுத்தியலால் அடித்து கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பளாகுரிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து(45) இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பெருமாள்(23) என்ற மகனும், பூவரசி(21) என்ற மகளும் உள்ளனர்
மருதமுத்துவுக்கு ஒரு மாடி வீடும், ஒரு கூரை வீடும் உள்ளதால், கூரை வீட்டில் அவரது மகனும் மருமகளும் வசித்து வருகின்றனர் மாடி வீட்டில் மருதமுத்து அவரது மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார்மருதமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இந்நிலையில், ஞாயிறு இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் மனைவி சித்ரா, கோபித்துக்கொண்டு சென்று, உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளார்திங்கள் காலை 7 மணி அளவில் இவர்களது மகள் பூவரசி தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது மருதமுத்து சுத்தியலால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனே, இது குறித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்
அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து இது குறித்து பொலிசார், மருதமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்அப்போது மருதமுத்துவின் மனைவி சித்ரா, நான் தான் கணவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்