அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையில் மாற்றங்கள் இருக்குமாயின் எல்லா இடங்களிலும் கூறிக்கொண்டிருக்க தேவையில்லை. கட்சி தலைவர்களின் கூறி, அரசாங்கத்தில் இருந்து கௌரவமாக விலகிக்கொள்ளமுடியும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தேர்தலுக்கு பயப்படவில்லை.
எனினும் அதற்கு மத்தியில் தடுப்பூசி திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். ஏனைய நாடுகளை போல அல்லாமல், இலங்கையிலும் முடக்கல்களை தொடரமுடியாது.
எனவே கொரோனாவை உரிய வகையில் கட்டுப்படுத்தி தேர்தல் ஒன்றுக்கு செல்லமுடியும் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கே வாக்களித்தனர். தனிப்பட்டவர்களை நம்பி வாக்களிக்கவில்லை. எனவே அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொறுப்பு உள்ளது என்றும் நாமல் தெரிவித்தார்.