திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர்உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகைதந்த சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன, சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.