நிதி மோசடி வழக்கில் நடிகை சன்னிலியோனைக் கைது செய்யக் கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் 29 லட்ச ரூபாயை சன்னி லியோன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் நாள் பலமுறை மாற்றப்பட்டதாலும், ஒப்புக்கொண்ட தொகையில் மேலும் 12 லட்ச ரூபாயைக் கொடுக்காததாலும் இறுதிவரை சன்னி லியோன் நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சன்னி லியோன் மீது கேரளக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது, இதன் காரணமாக அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது.இந்த வழக்கில் முன்பிணை கோரி சன்னி லியோனும் அவர் கணவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சன்னி லியோனைக் கைது செய்யத் தடை விதித்துள்ளது.