அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை – வளத்தாப்பிட்டி பிரதேசத்திற்கும் மல்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் குறித்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்