திருக்கோவில் பொலிஸ் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தாயாரை உச்சி முகர்ந்த பின்னர் எதிமலை பொலிசில் சரணடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருக்கோவில் பொலிசில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் முஸ்லிம் என இரு பொலிசாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் , பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த என்ன அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன் இரு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவை கூடுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
அத்துடன் தனது தாயாரைப் பார்த்து உச்சி முகர்ந்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சடலங்கள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்ள்ளது. இதேநேரம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிசார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்களையும் பார்வையிட்டார்.